இன்று வாக்குப்பதிவு... பெங்களூருவில் இவற்றுக்கெல்லாம் தடை... மால்கள் இயங்குமா? இவற்றுக்கு எல்லாம் அனுமதி?!

 
வாக்குப்பதிவு
இன்று மக்களவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று பெங்களூருவில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெறும் நிலையில், பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வங்கி, திரையரங்குகள் துவங்கி மதுக்கடைகள் வரை நாளை எவை எல்லாம் திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது... எவை எல்லாம் மூடப்பட்டிருக்கும் என்று பார்க்கலாம் வாங்க.

இன்று ஏப்ரல் 26ம் தேதி 18வது லோக்சபா தேர்தலில், எம்.பி.,யை தேர்ந்தெடுப்பதற்காக, பெங்களூருவின் நான்கு நாடாளுமன்ற தொகுதிகளில் (பெங்களூரு ரூரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூரு தெற்கு) இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவையொட்டி இன்று பெங்களூரு முழுவதும் பல தனியார் நிறுவனங்களும் மூடப்படும். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளுக்கு இன்று ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

வாக்குப்பதிவு தேர்தல்

பெங்களூருவில் இன்று வாக்குப்பதிவு தினத்தை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று பெங்களூருவில் ஏப்ரல் 24 முதல் 3 நாட்களுக்கு மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 26ம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். தனியார் பார்களைத் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

BREAKING! வாக்குப்பதிவு தொடக்கம்! நீண்ட வரிசையில் திரண்ட வாக்காளர்கள்!
ஏப்ரல் 26ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு தான் இந்த தடை நீக்கப்படும். 

பெங்களூருவில் சிஆர்பிசியின் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  கர்நாடகா உயர்நீதிமன்றம் தனது பெஞ்ச்களுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7-ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதனால் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றமும் இயங்காது. 

வங்கிகளுக்கும் இன்று வாக்குப்பதிவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏடிஎம் சேவைகளும், ஆன்லைன் வங்கி சேவைகளும் வழக்கம் போல் தொடரும். கார்ப்பரேட் அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், சட்டப்பூர்வ கடமைகளின்படி வாக்களிக்கும் செயல்பாட்டில் அவர்கள் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பிஎம்டிசி, பிஎம்ஆர்சிஎல் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது போக்குவரத்து இன்று ஏப்ரல் 26ம் தேதி பெங்களூரில் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.  எனினும் சில தனியார் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் வாக்குப்பதிவு வசதிக்காக இன்று ஒரு நாள் தாமதமாக வர அனுமதித்திருக்கின்றன.

பெங்களூரு நகர காவல் துறையின் வழிகாட்டுதலின்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகள் ஏப்ரல் 26ம் தேதி நள்ளிரவு வரை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!