தொடரும் தேர்தல் திருவிழா... நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு!

 
கங்கனா ரனாவத்

மழை விட்டும் தூவானம் விடாதது போல தேர்தல் முடிந்த பின்னரும், அதன் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. 543 மக்களவைத் தொகுதிகளில் NDA 292 இடங்களிலும், இந்தியக் கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஜூன் 9ம் தேதி பிரதமராக மோடி ஆட்சி அமைக்கிறார்.இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.

கங்கனா

கூட்டத்தில் பங்கேற்பதற்காக மண்டி தொகுதி பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்குச் சென்றார். பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரி குல்விந்தர் கவுருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது திடீரென அந்த அதிகாரி கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று விமர்சித்ததால் கங்கனா மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய பாதுகாப்பு படை பெண் காவலருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உருவம் பொறித்த தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web