நடிகை அனுஷ்கா - கோலி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை... குவியும் வாழ்த்துகள்!

 
கோலி அனுஷ்கா

கிரிக்கெட் வீரர் விராட் கோலி- அனுஷ்கா ஜோடி தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நட்சத்திர ஜோடி, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து ரசிகர்கள், இரண்டாவது குழந்தைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வாமிகா என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் நிலையில், இந்த நட்சத்திர ஜோடி தற்போது தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ளனர்.

முதல் குழந்தை செய்தியை சொன்னது போலவே, வரும் நாட்களில் இந்த ஜோடி இரண்டாவது குழந்தை என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அனுஷ்கா மும்பையில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று வந்ததே இது போன்றதொரு செய்தி வெளியாகக் காரணம்.

விராட் கோலி

தங்களது முதல் குழந்தை வாமிகாவின் முகத்தை இதுவரை அதிகம் பொதுவெளியில் காட்டாமல் இருக்கும் இந்த ஜோடி, வாமிகா வளர்ந்த பிறகு அவரின் விருப்பத்தோடு தான் புகைப்படங்களை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web