சச்சின் டெண்டுல்கர் அதிர்ச்சி... தன்னுடைய பாதுகாப்பு வீரர் பிரகாஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

 
பிரகாஷ் சச்சின்

இந்திய கிரிக்கெட்டின் மேஸ்ட்ரோ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த எஸ்ஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின்

இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, இளம் வீரர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறது. அவருடையை பாதுகாப்பு பணிக்காக மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் எஸ்ஆர்பிஎப் வீரர் பிரகாஷ் கப்டேவும் ஒருவர். இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஜாம்நர் நகருக்குச் சென்றிருந்த பிரகாஷ், யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.

இது குறித்து உறவினர்கள் கேட்ட போதும், எந்த பதிலும் சொல்லாமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எஸ்ஆர்பிஎப்-ல் வழங்கப்பட்டு இருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சச்சின் தெண்டுல்கர்

தற்கொலைச் செய்து கொண்ட  பிரகாஷ் கப்டேவுக்கு மனைவி, 2 குழந்தைகள், வயதான பெற்றோர் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் கப்டேவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web