சிறை நூலகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 1,500 புத்தகங்கள் நன்கொடை!

சிறைச்சாலையில் உள்ள நூலகத்திற்கு, தனக்கு பரிசாக வழங்கப்பட்ட 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெளியிடங்களுக்கு சென்றாலே அவருக்கு பொன்னாடைகள், பூங்கொத்துகள், புத்தகங்கள் வழங்கப்படுவதுண்டு. அந்த வகையில், முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தனக்கு பொன்னாடை போர்த்துவதை விட, புத்தகங்களை வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நான் தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்ற போது, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து - பொன்னாடைகளைத் தவிர்த்து, புத்தகங்களை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுத்து, ஓர் அறிவியக்கத்தை முன்னெடுத்தோம்.
— M.K.Stalin (@mkstalin) October 28, 2023
அப்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் 1500 புத்தகங்களை இன்று… pic.twitter.com/pukyPVjwQ6
அதன்படி முதல்வர் அவரகள், அரசு நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றாலே அவருக்கு பெரும்பாலான அரசியல் தலைவர்கள் புத்தகங்களை கொடுத்து வரவேற்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், முதல்வர் அவர்கள், தனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் புத்தகங்களை சேமித்து வைத்து பல்வேறு நூலகங்களுக்கு வழங்கி வருவது வழக்கம்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1500 புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலாளர் அமுதா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘’கடந்த 2018-ஆம் ஆண்டு நான் தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்ற போது, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து - பொன்னாடைகளைத் தவிர்த்து, புத்தகங்களை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுத்து, ஓர் அறிவியக்கத்தை முன்னெடுத்தோம்.
அப்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் 1500 புத்தகங்களை இன்று சிறைத்துறைக்கு வழங்கினேன். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை நூல் நிலையங்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்க்கும் வழங்கியுள்ளேன். சிறைவாசிகள் புத்தகங்களைப் படித்துப் பயனுற வேண்டும்!’’ என குறிப்பிட்டுள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!