பிரபல நடிகை 2வது திருமணம்... குவியும் வாழ்த்துகள்!

 
அமலாபால்

நடிகைகளில் நயன்தாராவுக்கு  பின்னர் அதிக பரபரப்பைக் கிளப்பி வருபவர் நடிகை அமலாபால் தான். தமிழ் திரையுலகில் வேறு படத்தில் அறிமுகமானாலும், லைம் லைட்டுக்கு வர வேண்டுமானால் பரபரப்பைக் கிளப்ப வேண்டும் என்பதை மிக சரியாக புரிந்து கொண்டு ‘சிந்து சமவெளி’ படத்தில் பட்டையைக் கிளப்பினார். யார்....ரா இது? என்று அதிர்ச்சியுடன் ரசிகர்கள் ரசிக்க துவங்கியதும், ‘மைனா’ படம் மூலமாக தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை நிரூபித்தார்.  இந்நிலையில், தனது நண்பரை 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை அமலாபால். அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Amalapaul

இதன்பிறகு புதுச்சேரியில் தங்கி இருந்த அமலாபால், பயணங்கள் செல்வது, பிடித்த இடத்திற்கு செல்வது என தன்னுடைய வாழ்வியலை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் 2020-ம் ஆண்டு இறுதியில் இந்தி பாடகர் பவிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவியது. மேலும் அவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருந்த புகைப்படங்களும் வெளியாக்கின.

இருந்தாலும் சில மாதங்கள் கழித்து அந்த செய்தியை அமலா பால் மறுத்தார். ஆனாலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் எனவும் கூறப்பட்டது. இது எதையும் கண்டுகொள்ளாமல் இருந்த அமலா பால், பல வெளிநாடுகளுக்கு செல்வது, அட்வென்ச்சர் இடங்களுக்கு செல்வது என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

View this post on Instagram

A post shared by Jagat Desai (@j_desaii)

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாபாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் தனது காதலை வெளிப்படுத்தினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமலாபால் முத்தம் கொடுத்து காதலை ஏற்றுக்கொண்டார். அந்த வீடியோ வைரலானது. 

இந்நிலையில் ஜெகத் தேசாயை அமலாபால் திருமணம் செய்துகொண்டுள்ளார். இருவரின் திருமணம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் ரெசார்ட்டில் நடைபெற்றுள்ளது. அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெகத் தேசாய், 'இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, என் தெய்வீகப் பெண்ணுடன் இந்த வாழ்நாள் முழுவதும் கைகோர்த்து நடப்பேன்...' என பதிவிட்டுள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web