கடல் அரிப்பு தொடர்பாக ஆய்வு நடத்த மீனவர்கள் கோரிக்கை!

 
கடல் அரிப்பு தொடர்பாக ஆய்வு நடத்த மீனவர்கள் கோரிக்கை!


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், பெரியதாழை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு  தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மீனவர்கள் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் பெரியதாழை மற்றும் வேம்பார் உள்ளிட்ட கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ கிராமங்கள் கடலுக்கு உள்ளே செல்லும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு தாது மணல் கொள்ளை காரணமா? அல்லது துறைமுக விரிவாக்கம் காரணமா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, மீனவ கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் அனைவரும் உயிர்காக்கும் லைப் ஜாக்கெட்டை ரூ.600 கொடுத்து வாங்கினால் தான் டீசல் மானியம் வழங்கப்படும் என உத்தரவு  பிறப்பித்து மீன்வளத்துறை மீன்பிடி  படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை ரத்து செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும். புயல் மற்றும் மழை காரணமாக கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில் இந்த லைப் ஜாக்கெட்டை விலை இல்லாமல் வழங்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இலங்கை மீனவர்கள்

மேலும் புன்னக்காயல், பெரிய தாழை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சுமார் 50  நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படுவதால் குடிநீர் இல்லாமல் மீனவ மக்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். எனவே மீனவ கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் சங்குகுளி மீனவர்கள் தொழில் செய்ய சங்குகுளி சட்டம் 1981 இல் உரிய சட்ட திருத்தம் செய்து புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டுமென சங்குளி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web