அதிர்ச்சி... பெரும் சோகம்... 8 மாத கர்ப்பிணி... பிரபல மலையாள நடிகை மாரடைப்பால் மரணம்!

 
priya

பிரபல மலையாள சின்னத்திரை நடிகையான பிரியா எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளது மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாள சின்னத்திரையில் பிரபல நடிகையான பிரியா திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு வயது 35. இவர் மரணமடையும் போது எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை சக நடிகரான கிஷோர் சத்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பிரியாவின் குழந்தை தற்போது ஐசியுவில் இருப்பதையும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் கிஷோரின் பதிவு

மேலும் அந்தப் பதிவில், ‘பிரியாவின் அம்மாவும் கணவரும் இந்தத் துயரத்தில் இருந்து எப்படி மீள்வார்கள் என்பது தெரியவில்லை. 35 வயது என்பது மரணத்திற்கான வயதே கிடையாது. விடை தெரியாத பல கேள்விகள் எனக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என உருக்கமாகப் பிரியாவின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த பிரியா கர்ப்பமானதற்குப் பிறகு தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார் எனத் தெரிகிறது. அப்படி இருந்தும் இந்த திடீர் மாரடைப்புக்கு என்ன காரணம் என்பது குறித்தும் இன்னும் அவர் தரப்பில் தெளிவான விளக்கம் வெளிவரவில்லை.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web