போட்றா வெடிய... தீபாவளி ஆரம்பம்... நாளை முதல் தமிழகத்தில் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
தீபாவளி

தமிழகம் முழுவதும் இப்போதில் இருந்தே தீபாவளி களை கட்டத் துவங்கியுள்ளது. நாளை முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 16,895 சிறப்பு பேருந்துகள் தீபாவளி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்படுகிறது. இம்மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்போதிருந்தே பட்டாசுகள், புத்தாடைகள் என கடைவீதிகளில் களைகட்டத் தொடங்கியுள்ளன.  

நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவது பெரும் கவலையை அளிப்பதாக  இருந்த நிலையில், அடுத்த நாளான திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதும், தீபாவளி மேலும் களைகட்டத் துவங்கியுள்ளது. தற்போது சென்னையில் இருப்பவர்கள், சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் பண்டிகை காலங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

ரயில்களில் 120 நாட்களுக்கு முன்னரே  முன்பதிவு செய்ய வேண்டி இருப்பதால் ஜூலை மாதமே டிக்கெட்டுகள் அனைத்தும்  விற்றுத் தீர்ந்துவிட்டன.  மக்களின் தேவைகளின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  

அரசுப் பேருந்து

நாளை நவம்பர் 9 ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை சேர்த்து, நாளை நவம்பர் 9ம் தேதி 3,465 பேருந்துகளும், 10 ம் தேதி 3,395 பேருந்துகளும், 11 ம் தேதி 3,515 பேருந்துகள் என 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் மூலம் 6 லட்சம் பயணிகள் சொந்த ஊருக்கு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதே போல் தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் 13 ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கூட்ட நெரிசலின்றி பயணிகள் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர்த்து 5 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ECR வழியாக புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்து

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகள், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரிகடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர். ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம் செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி செல்லும் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web