பனி பிரேதேசத்தில் ராட்சத வைரஸ்... விஞ்ஞானிகள் சொன்ன குட் நீயூஸ்!

 
ஆர்க்டிக் பிரேதேசம்

கிரீன்லாந்து பனியால் மூடப்பட்ட ஆர்க்டிக் பகுதியைக் கொண்டுள்ளது. தற்போது இங்கு ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ்கள் நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்த வகை வைரஸ் முதன்முதலில் 1981ல் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது முதல் முறையாக அது பனிக்கட்டி  பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றை மனிதக் கண்ணால் மட்டுமல்ல நுண்ணோக்கி மூலமும் பார்க்க முடியாது. இந்நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்களால் நல்லதே நடக்கும் என டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பருவநிலை மாற்றத்தால் தற்போது ஆர்க்டிக் பகுதியில் பனி உருகி வருகிறது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் பனி உருகுவதைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதாவது அவை பனி உருகும் பாசிகளைக் கொன்று, பனி உருகாமல் பார்த்துக் கொள்கின்றன என்று மைக்ரோபயோம் இதழ் கூறுகிறது. இருப்பினும், இது எந்த அளவுக்கு வீரியம் மிக்கது என்பது சரியாகத் தெரியவில்லை. மேலும் இதை ஆராய்ச்சி மூலம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்றார்கள்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web