பெரும் சோகம்... மரண ஓலம்... கதறும் மக்கள்... காசாவில் 4104 குழந்தைகள் பலியான சோகம்!

 
காசா

உலகின் ஏதோவொரு மூலையில் நடந்து கொண்டிருக்கிற போர் அவலம் என்றாலும், போர் காட்சிகளைக் காண்பவர்களின் கண்கள் கலங்குகிறது. காசா, இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரையில் 4,104 குழந்தைகள் பலியாகியுள்ளதாக வெளியாகும் தகவல் பதைபதைக்க செய்கிறது. அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும்  இடையே மிகக் கொடூரமான போர் தொடங்கி   தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாட்கள் நகர்ந்தாலும், கொடூரங்களை அனுபவித்து வருகிறார்கள் அந்த பகுதி மக்கள். எது பற்றியும் கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலில் காசாவில் இதுவரை 10000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதில் 4,104 பேர் குழந்தைகள், 2,640 பேர் பெண்கள் என்பது  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் காசா குழந்தைகளின் மயானமாக மாறி வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தெரிவித்ததுடன், உடனடியாக போரை நிறுத்துங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதற்கிடையில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ்

அவர் கூறும்போது, ‘‘மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் சென்று சேர்வதை உறுதி செய்யவும், பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டெடுக்கவும் காசாவில் அவ்வப்போது திட்டமிட்டு சற்றே லாவகமாக தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே கூறியபடி போர் நிறுத்தம் என்பதற்கு வாய்ப்பு கிடையாது. போர் முடிந்த பிறகு காசாவை முழுக்கட்டுப்பாட்டுக்குள் சில காலம் எடுத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web