இந்திய ஹோட்டல்களின் தந்தை... ‘ஓபராய்’ நிறுவனர் பிரித்விராஜ் சிங் ஓபராய் காலமானார்!பிரபலங்கள் இரங்கல்!

 
பிரித்விராஜ்

இந்திய ஹோட்டல்களின் தந்தை என்றழைக்கப்படுபவர் பிரித்விராஜ் சிங் ஓபராய். இந்தியாவிலேயே  நட்சத்திர ரெஸார்ட் ஓட்டல் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது ஓபராய். இந்தியாவில் 3வது மிகப்பெரிய நடத்திர ஓட்டலாக திகழும் ஓபராய் ஓட்டல்களின் நிறுவனர் பிரித்விராஜ் சிங் ஓபராய். இந்தியாவில் ஓட்டல் தொழிலுக்கே புதிய வடிவத்தை அளித்த பிரித்விராஜ் சிங், இன்று காலை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இவரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு 2008ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கியது.

பிரித்விராஜ்

அத்துடன் இவர் பல சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.  2010ல்  தி ஓட்டல்ஸ், ஓபராயை இந்திய ஓட்டல் நிறுவனங்களின் தந்தை என புகழாரம் சூட்டியிருந்தது.   இவரது வருகைக்கு பிறகே இந்தியாவில் மதிப்புமிக்க, உயர்ரக நட்சத்திர ஓட்டல்கள் இந்தியாவில் வந்ததாக அந்த கட்டுரையில்   குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓபராய்

ஓபராய் வயது மூப்பின் காரணமாக   2022 மே மாதமே  தனது ஓட்டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகியிருந்தார். அவரது மகன்கள் நிர்வாகத்தை தற்போது பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவரது இழப்பு ஓபராய் குழுமத்திற்கு பெரும் இழப்பு என அவரது மகன்களாக விவேக் மற்றும் அர்ஜூன் ஓபராய்  தெரிவித்துள்ளனர்.இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web