தீபாவளி திருவிழா | ஒரே நாளில் ரூ.60,000 கோடிக்கு எகிறிய வியாபாரம்... ரூ.20,000 கோடிக்கு தங்கம் வாங்கி குவிந்த மக்கள்!

 
நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கி உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் ரூ.60,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் ஒரே நாளில் மக்கள் ரூ.20,000 கோடிக்கு தங்கம் வாங்கி குவித்துள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாடு முழுவதும் ரூ.20,000 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ 2,500 கோடி மதிப்புள்ள வெள்ளியும் நேற்று ஒரே நாளில் விற்பனை செய்யப்பட்டதாக சிஏஐடியின் பொதுச் செயலாளரும் சாந்தினி சௌக்கின் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.  

 

சிஏஐடியின் அகில இந்திய நகை வியாபாரிகள் மற்றும் தங்க நகைகள் கூட்டமைப்பு (ஏஐஜேஜிஎஃப்) தேசிய தலைவர் பங்கஜ் அரோரா, தங்கம் மற்றும் வெள்ளிக்கு அதிக தேவை இருப்பதாக அந்த அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.  விலைவாசி உயர்வு காரணமாக குறைவான எடையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலும்  பண அடிப்படையில் விற்பனை அதிகரித்ததாக கூறியுள்ளார்.  


“இந்த ஆண்டு, சுமார் 25 டன் தங்கம் நாடு முழுவதும் விற்கப்பட்டது, இதன் மதிப்பு சுமார் ரூ 20,000 கோடி, அதே சமயம் தோராயமாக 250 டன் வெள்ளி ரூ 2,500 கோடிக்கு விற்கப்பட்டது. கூடுதலாக, பழைய வெள்ளி நாணயங்களின் தேவை அதிகரித்தது, ஒரு நாணயம் ரூ 1,200 முதல் ரூ 1,300 வரை விலையில் உள்ளது,” எனக் கூறியுள்ளார்.  

டெல்லியில், சாந்தினி சௌக் , தரிபா கலன், சதர் பஜார், கமலா நகர், அசோக் விஹார், மாடல் டவுன், பிடம்புரா, பஸ்சிம் விஹார், ரோகினி, ரஜோரி கார்டன், துவாரகா, ஜனக்புரி, தெற்கு விரிவாக்கம், கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட பிரபலமான சில்லறை சந்தைகளில் தந்தேராஸ்  தீபாவளி விற்பனை அதிகரித்ததாக தெரிகிறது.  

தீபாவளியின் ஐந்து நாள் கொண்டாட்டத்தின் தொடக்க நாளான நேற்று  தந்த்ரோஸ் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. தந்த்ராஸ் நாளில் குபேரர், லட்சுமி தேவி மற்றும் தன்வந்திரி பகவானை வணங்கி செல்வம் மற்றும் ஆரோக்கியம் பெற ஆசீர்வாதம் பெறுகின்றனர். இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்குவது மிகவும் மங்களகரமானதாகவும், அதிர்ஷ்டமானதாகவும் கருதப்படுகிறது. 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!