undefined

கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன்... செருப்பால் அடித்து துவைத்தெடுத்த மனைவி... வைரலாகும் வீடியோ!

 
நாடு முழுவதும், தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று மனைவிமார்கள் விரதம் இருந்து ‘கர்வா சௌத்’ விழாவைக் கொண்டாடி வந்த நிலையில், கர்வா தினத்தில் தனது கள்ளக்காதலியுடன் கணவன் தனியறையில் இருந்த போது கையும் களவுமாகப் பிடித்த மனைவி, தனது உறவினர்களையும் உடன் அழைத்துச் சென்றிருந்த நிலையில், கணவனை செருப்பால் அடித்து துவைத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் இருந்து வெளியான அந்த வைரலான வீடியோவில், அங்கன்வாடியில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருடன் தனது கணவர் தொடர்பு வைத்திருப்பதை மனைவி கண்டுபிடித்தார்.


அதன் பிறகு அவசரப்படாமல் இந்த விஷயத்தை தனது உறவினர்களிடம் எடுத்துச் சொன்னாள். அடுத்து நடந்தது தான் பகீர் கிளப்பும் சம்பவங்கள். கள்ளக்காதலில் ஈடுபட்டு வரும் இருவரையும் தாக்க மனைவியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் செருப்புகளைத் தயார் செய்துக் கொண்டு அவர்கள் இருந்த அறைக்குச் செல்கிறார்கள். 

“காசியாபாத்365” எனும் ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ காட்சியில், கணவருக்குச் சொந்தமான உரம் மற்றும் விதைகளை விற்பனைச் செய்யும் கடையில், அவரும் அவரது கள்ளக்காதலியும் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்கிற தகவல் அறிந்து மனைவி, தனது குடும்பத்தினரையும், சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு நேராக கடைக்குள் நுழைகிறாள். அவர்களை ஒன்றாகப் பிடித்த பிறகு, இருவர் மீதும் தங்கள் கோபத்தை செருப்பால் அடித்து வெளிப்படுத்தினர்.

உள்ளூர் தொடக்கப் பள்ளி ஒன்றில் உதவி ஆசிரியராக வேலைப் பார்த்து வரும் அந்த இளம்பெண் தனது கணவரை அடிக்கடி கடையில் வந்து சந்திப்பதாகவும், இது குறித்து மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்குள் நடக்கும் விவகாரத்தை கண்டுபிடித்தாள். 

வைரலான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வரும் பலரும், மனைவியின் துணிச்சலைப் பாராட்டுகிறார்கள். மற்றவர்கள் கணவனின் பொது அவமானத்தை விமர்சிக்கிறார்கள். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!