அதிர்ச்சி..  டிரக் மீது மினிவேன் மோதி கோர விபத்து... 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கைகனபாலி பகுதியில் இன்று அதிகாலை டிரக் மீது மினிவேன் மோதியது. இதில் மினிவேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் இறந்த அனைவரும் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கந்தகோடா மற்றும் சமர்பிந்தா கிராமங்களை சேர்ந்தவர்கள். தீபாவளியையொட்டி சக்பிளை கிராமத்தில் நடைபெற்ற கீர்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மினிவேனில் சென்றுள்ளனர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!