அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!!

 

தமிழ் இலக்கிய வித்தகர் , பட்டிமன்ற ஜாம்பவான் தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன்  உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 85. 2010க்கு பிறகு  சர்க்கரை நோய் காரணமாக உடல் உபாதைகளை கொண்டிருந்தார்.  இதனால் அவ்வப்போது மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வந்தார்.  தற்போது வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக  மரணம் அடைந்தார் .

 

கடந்த சில நாட்களாக மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இவருடைய தனிப்புலமையால் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர், சென்னை பாரத் பல்கலைக்கழக வேந்தர்  என பல்வேறு பொறுப்புக்களை சிரமேற்கொண்டு செய்து வந்தவர்.  

தொல்காப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் எனத் தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களுக்கு உரை ஆற்றியவர். இவர் கவிஞர் சுரதாவால் பாதி அண்ணா என புகழப்பட்டவர். இவருடைய தமிழ்  பணிகளுக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற  விருதுகளை பெற்றவர். அவருடைய மறைவு  தமிழ்த்துறையினர்க்கும், கல்விப்புலத்தார்க்கும் பேரிழப்பு  அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் , அறிஞர்  பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என முதல்வர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  வாழ்விக்க வந்த வள்ளலார், கம்பர் விருந்து, கம்பர் கட்சி எனப்   பல்வேறு நூல்களையும் எழுதியவர். 
இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து  உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!