உலகக்கோப்பை கால்பந்து மணற்சிற்பம்!! பூரி கடற்கரையில் அசத்தல்!!

 

1930ம் ஆண்டு முதல்  4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் குறிப்பிடத்தக்கது. 1942, 1946 என இருமுறை 2வது உலகப்போர் காரணமாக கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.  கடைசியாக 2018ல் ரஷியாவில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் நேற்று நவம்பர் 20ம் தேதி  22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் விமரிசையாக தொடங்கியது. 2வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன. 


இந்நிலையில், கத்தாரில் கோலாகலமாக தொடங்கிய பிஃபா உலகக் கோப்பை கால்பந்து குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கி உள்ளார். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், 5 டன் மணலைக் கொண்டு இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 32 நாடுகளின் 1,350 நாணயங்களுடன் , இந்திய நாணயங்களையும் இந்த சிற்பத்தில் பதித்துள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு மணல் சிற்ப போட்டிகளில் கலந்து கொண்ட போது இந்த நாணயங்கள் சேகரிக்கப்பட்டதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!