undefined

  குடியிருப்புப் பகுதியில் உலவும் செந்நாய் கூட்டம்... பீதியில் கிராம மக்கள்!

 
 


நீலகிரி மாவட்டத்தில் உதகையை அடுத்த சோலூா் ஜங்ஷன் குடியிருப்பு வளாகப் பகுதியில் செந்நாய்கள் உலவித்திரிகின்றன. இவை எருமைக் கன்றை செந்நாய் கூட்டம் வேட்டையாடி உண்ணும் காட்சி வெளியானதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.


நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உணவு, தண்ணீா் தேடி வனங்களை விட்டு சிறுத்தை, காட்டெருமை, கரடி ஆகியவை  அவ்வப்போது வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து உலவுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சோலூா் ஜங்ஷன் பகுதிக்கு நேற்று அக்டோபர் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை  செந்நாய் கூட்டம் வந்தது.

இந்தக் கூட்டம்  அங்கிருந்த எருமைக் கன்றை வேட்டையாடி உண்ணும் காட்சியை சிலா் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா். இக்காட்சிகள்  வெளியாகி உள்ளதால் அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்புவாசிகள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.   அசம்பாவிதம் நடக்கும் முன் இப்பகுதியில் உலவி வரும் செந்நாய் கூட்டத்தை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டயடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!