‘அமரன்’ ஒரு போர் படம் கிடையாது... வீரனின் வாழ்க்கை கதை... இயக்குனர் பேட்டி!
இந்த வருட தீபாவளிக்கு ரசிகர்களிடையே கங்குவா படமும் அமரன் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமரன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
ரியல் ஹீரோவான முகுந்த் கதை என்கிற அடைமொழியுடன் படம் தயாரிப்பில் இருந்த போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வந்தது. போதாதற்கு படத்தில் சாய் பல்லவி ஹீரோயின். அந்த துடிப்பான நடிப்புக்கு தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பு இருந்தே வருகிறது.
படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வரும் படக்குழுவினர் உற்சாகமாக பேசி வருகின்றனர். இந்நிலையில், ‘அமரன்’ படம் ஒரு போர் படம் கிடையாது. வாழ்க்கைக் கதை என்று படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.
2014ல் காஷ்மீரில் கொல்லப்பட்ட மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் அமரன் படம். கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பின் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அமரன் போர் படம் கிடையாது. இது ஒரு சிப்பாய் பற்றிய வாழ்க்கை நாடகம். அமரனின் குடும்பம், காஷ்மீரின் நிலைமை மற்றும் இராணுவத்தின் பங்கு பற்றி அதிகம் பேசுகிறது. கமல் இந்த படத்தில் புதுமுகத்தை நடிக்க வைக்க பரிந்துரைத்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீசை சந்தித்த போது, நடிகர் மாதவனைப் போலவே மேஜர் முகுந்த் மேடி என்று அழைக்கப்படுகிறார் என்பது எனக்கு தெரியவந்தது. உண்மையில், அவரது செயல்பாட்டு குறியீட்டு பெயர் மேடி. படத்தில் வலுவான ஒரு நடிகரை நடிக்க வைக்குமாறு இந்து கூறியிருந்தார். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களின் போது சிவகார்த்திகேயன் தேசியக் கொடியுடன் படங்களை வெளியிடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படி தான் சிவா மனசுக்குள் வந்தார்.
எனக்கு சிவகார்த்திகேயனை விஜய் டிவியில் இருந்தே தெரியும். சிவகார்த்திகேயனிடம் அமரன் கதையை சொல்ல சென்றபோது அவர் டான் படப்பிடிப்பில் இருந்தார். இந்த படத்தில் சிவாவின் மனைவியாக, இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடிக்கிறார், சாய் பல்லவியை உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா காலத்திலிருந்தே தெரியும். அதனால் தான் அவள் என் தேர்வு” என்றார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!