தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு... இருவரும் ஆஜராகாததால் விசாரணை தள்ளிவைப்பு!

 
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து  வழக்கில் இருவரும் இரண்டாவது முறையாக மீண்டும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவ.18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே, கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சமூகவலைதளத்தில் அறிவித்தனர்.

இந்நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகவில்லை. 

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். கடந்த முறை வழக்கு விசாரணையின் போதும் இருவரும் ஆஜராகாதது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!