undefined

 போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்... முன்னாள் டிஜிபி மகன் சென்னையில் கைது!

 
 

தமிழகம் முழுவதும் சமீப காலங்களாக போதைப் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடும், விற்பனையும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் மகன் அருண் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் விற்பனை, கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதுமே போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் அரும்பாக்கம், கொடுங்கையூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக நைஜீரியாவைச் சேர்ந்த கபீப் குளோன்ஸ் (32), ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வநாதன் (47) உட்பட 19 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புடைய ஒரு கிலோவுக்கும் அதிகமான மெத்தம்பெட்டமைன், கோகைன் உள்ளிட்ட கொடிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருளின் சந்தை மதிப்பு கிராமுக்கு 2,500 ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரொக்கப்பணம், செல்போன்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற முன்னாள் சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யான ரவீந்திரநாத் மகன் அருண் (40) என்பவரை சென்னை மவுண்ட் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காவல் துறையின் உயரதிகாரியாக வலம் வந்த டிஜிபி ரவீந்திரநாத் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!