undefined

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்... புதிய கவர்னராகும் மாஜி மத்திய அமைச்சர்?!

 

தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்வில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் திருவிட நல் திருநாடு என்ற வரி நீக்கப்பட்டது. இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறூ அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே  ஆர்என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.  

இந்நிலையில் தான் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவில்  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குறிப்பிட்ட வரிகள் மிஸ்ஸானதில் சர்ச்சையை கிளப்பியது.  

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றாப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் விகே சிங் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விகே சிங் தமிழகத்தில் பல தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விகே சிங் பாஜகவில் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் லோக்சபா தொகுதியில் 2014, 2019ல் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!