இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்.. 5 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பரிதாப பலி!
காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா அரசாங்கத்தின் ஊடக அலுவலகத்தின் அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அல்-கிஸா தொலைக்காட்சி நிருபர் சயீத் ரத்வான், சனத் செய்தி நிருபர் ஹம்சா அபு சல்மியா, அல்-குட்ஸ் நிருபர் ஹனீன் பரூத், சாத் அல்-சாகிப் செய்தி நிறுவனமான அப்துல் ரஹ்மான் அல்-தானானி மற்றும் சுயாதீன நிருபர் நாடியா அல்-சயீத் ஆகியோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பாலஸ்தீன ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலஸ்தீன ஊடகவியலாளர்களுக்கு எதிரான இத்தகைய அட்டூழியங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இஸ்ரேலின் குற்றங்கள் குறித்து தொடர்ந்து செய்தி வெளியிடும் பாலஸ்தீன ஊடகவியலாளர்களை இந்தத் தாக்குதல்கள் அச்சுறுத்தவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் உள்ள பத்திரிகையாளர்களை இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்டு இலக்கு வைப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. காஸா பகுதியில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான இந்த திட்டமிட்ட தாக்குதல்களை நிறுத்த சர்வதேச ஊடகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்தகைய பழிவாங்கும் கொலைகளுக்கு பாசிச இஸ்ரேலிய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
பாலஸ்தீன ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து இஸ்ரேலின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த அவர்களுடன் ஒற்றுமையாக நிற்குமாறு சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்கள் அக்டோபர் 7, 2023 இல் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!