விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது.. பயங்கரவாதம் குறித்து புத்தகம் எழுதியவர்!
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து விமான நிலையங்களுக்கும், இந்திய விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் பயங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பல்வேறு முன்னணி விமான சேவை நிறுவனங்களை சேர்ந்த 400-க்கும் அதிகமான விமானங்களுக்கு கடந்த 15 நாட்களில் சமூகவலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இந்தநிலையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மராட்டிய மாநிலத்தில் உள்ள கோண்டியாவை சேர்ந்த ஜக்தீஷ் உய்கே (35) என்பது தெரிய வந்துள்ளது.
இவர் விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி பிரதமர் அலுவலகம், ரயில்வே மந்திரி, மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அலுவலகம் மிரட்டல் இ-மெயில் அனுப்பி உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். ஜக்தீஷ் உய்கே பயங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாகவும், 2021ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்து உள்ளது. இந்தநிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில் தலைமறைவாக இருந்த ஜக்தீஷ் உய்கேயை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!