அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !!!
தமிழகத்தில் காலையில் பள்ளிப்பிள்ளைகள் பசியோடு பள்ளிகளுக்கு வருவதை தடுக்கவும், ஆரோக்கியமான கல்வி முறையை கொண்டு வரவும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியை இன்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு உணவு அருந்தும் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார்.
திருச்சி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தோம். அங்கு வழங்கப்படும் உணவை மாணவச் செல்வங்களுடன் அந்த வகையில் இன்று பள்ளிகளில் பிள்ளைகளுடன் அமர்ந்து சாப்பிட்ட போது, பள்ளியிலேயே வழங்கப்படும் காலை உணவு சிறப்பாக இருக்கிறது என மாணவர்கள் கூறியது மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்தது. பசி நீக்கி அறிவு புகட்டும் இத்திட்டம் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்யும்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!