undefined

பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பத்மஸ்ரீ பிபேக் டெப்ராய் காலமானார்!

 

 

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான பிபேக் டெப்ராய், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் முக்கிய நபராக திகழந்தார். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான பிபேக் டெப்ராய் தனது 69வது வயதில் இன்று காலமானார்.

 

ஷில்லாங்கில் பெங்காலி குடும்பத்தில் பிறந்த பிபேக் டெப்ராய், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (நரேந்திரபூர்), பிரசிடென்சி கல்லூரி (கல்கத்தா), டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்தார்.

 

டெப்ராய் பல மதிப்புமிக்க நிறுவனங்களில் கற்பித்துள்ளதுடன், ஏராளமான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல முக்கிய செய்தித்தாள்களுக்கு நிதி ஆலோசனை குறித்த கட்டுரைகளின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். 

மகாபாரதத்தை பத்து தொகுதிகளாகவும், வால்மீகி ராமாயணத்தை மூன்று தொகுதிகளாகவும் மொழிபெயர்த்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

 

2015ல், இந்தியாவின் உயர்மட்ட கொள்கை சிந்தனைக் குழுவான NITI ஆயோக்கின் நிரந்தர உறுப்பினராக டெப்ராய் நியமிக்கப்பட்டார், மேலும் பொதுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

இந்தியாவின் அறிவுசார் மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சிந்தனைத் தலைவராக டெப்ராய் அடுத்த தலைமுறையினரிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று காலமானார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!