undefined

 காலையிலேயே அதிர்ச்சி... அரசு பேருந்துடன் மினி லாரி மோதி விபத்து; 2 பேர் பலி!

 
 


திருநெல்வேலி மாவட்டம் மூன்றைடப்பு அருகே அரசு பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் பரிதாபமாக பலியானார்கள். 

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த மினி லாரி அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் நான்குநேரி அருகே உள்ள படலையார் குளம் ஜேஜே நகரைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி மகேஷ்( 20) என்பவரும், முதலை குளம் செல்வராஜ் மகன்உசிலவேல் (36) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். 

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூன்றடைப்பு காவல் துறையினர், உயிரிழந்தவர்களிடன் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!