அதிர்ச்சி வீடியோ... ரீல்ஸ் விபரீதம்... 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து இளைஞர் மரணம்!
நாடு முழுவதும் ரீல்ஸ் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உயிரையும் பொருட்படுத்தாமல் பலர் விபரீத சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் இப்படி ரீல்ஸ் எடுக்கும் போது 3வது மாடியில் இருந்து இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஸ்லோ மோஷனில் ரீல்ஸ் எடுக்க முயன்ற 20 வயது இளைஞர் 3 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிப் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ படம்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட கதவை திறக்கும் போது தவறுதலாக மூன்றாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் ஆசிஃப்பிறகு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆசிப்பை அவரது நண்பர்கள் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தம் வெளியேறியதினால் ஆசீப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!