undefined

 இன்போசிஸ்  சுதாமூர்த்தி தமிழகத்தில் கோவில் கட்டுகிறார்... நெகிழ்ச்சி பதிவு!

 


 
தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் கட்ட இருப்பதாக சுதாமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து அவர்  ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இவாநல்லூர் கிராமத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி உள்பட பல்வேறு கடவுள்களின் பழமையான சிலைகளை, சிறுசிறு குடிசைகளில் வைத்து, அந்த கிராமத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். முறையான கட்டுமானங்கள் இல்லாமல் கோவில்கள் இருப்பதைக் கண்டு மனம் வாடினேன்.

இதனையடுத்து சுதா மூர்த்தி, இவாநல்லூரில் தனது சொந்த செலவில் கோவில் கட்ட முடிவு செய்துள்ளார்.  சிறுவயதில் எனது தாத்தா, நிறைய விஜயநகர பேரரசின் கதைகளை சொல்லுவார். கல்வியை போதித்தல், பிறருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தல், குளங்கள், கோவில்கள் கட்டுவது இவைகளை செய்தால்  தான் ஒருவரின் வாழ்க்கை முழுமையடையும் என அறிஞர்கள் சொல்லுவர்கள்.
கோவில்கள், குளங்களை மறுசீரமைப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டதால், புதிதாக கோவிலை கட்ட மறந்து விட்டனர்.

தற்போது, இவாநல்லூரில் கோவில் கட்டுவதன் மூலம், எனது ஆசை நிறைவேறியுள்ளது," எனக் கூறினார். மேலும், தமிழக கிராமங்களில் பழமையான கடவுள் சிலைகள் இருப்பதாக நண்பரின் மூலம் தெரிந்து கொண்டேன். அடுத்த 18 மாதங்களுக்குள் இவாநல்லூரில்  சொந்த செலவில் கோவிலை கட்டி முடிக்கவும்   முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.  கடந்த வாரம் நடந்த கோவில் பூமி பூஜையில் அவர் கலந்து கொண்டதாகவும், பாரம்பரிய கலாச்சாரம் முறைப்படி கோவிலில் அனைத்து சடங்குகளும் செய்யப்படும் என சுதா மூர்த்தி உறுதியளித்துள்ளார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!