undefined

 தவெக மாநாடு நடைபெறும் இடத்தில்  3 மணி நேரம் திடீர் ஆய்வு...  பரபரப்பு!

 


 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை மறுநாள் அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தவெகவின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.   தமிழகத்தில் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பும் மாநாட்டை நோக்கி திரும்பியுள்ளது.  கட்சியின் தொண்டர்கள் அனைவரும் விஜயின் பேச்சு மற்றும் கட்சியின் கொள்கை என்னவென்ன என்பதை கேட்க ஆர்வத்துடன் காத்துக்கிடக்கின்றனர்.  


இந்நிலையில், மாநாட்டு கட்டமைப்பு ஏற்பாடுகள் குறித்து  அக்கட்சித் தலைவர் விஜய் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார். அதைப்போல, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரும் மாநாடு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று 3 மணி நேரம் ஆய்வு செய்தனர்.
 
ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு  கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்குச் செய்யப்பட்டு இருக்கிறது? என்பது பற்றி விசாரணை நடத்தினர்.   மாநாடு நடத்தக்கோரி அனுமதி கேட்டு மனு அளித்தபோதே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து 21 கேள்விகள் அடங்கிய ஒரு நோட்டீஸ் அனுப்பி அதற்கு தகுந்த  பதில் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
 மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தண்ணீர்,  கழிவறை ,  வாகனம் நிறுத்த  ஏற்பாடு என பலவகையான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு கட்சி தரப்பிலிருந்து விரிவான   விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.


குறித்தபடி அனைத்து பணிகளும்  சரியாக நடக்கிறதா? பார்க்கிங் வசதி சரியாகச் செய்யப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்துத் தான் 3 மணி நேரம் மேலாக விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர், கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர்  ஆய்வை மேற்கொண்டார்கள்.
 
ஆய்வுக்கு பிறகு இது குறித்து  விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் நந்தகுமார் ” மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கொடுத்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி வருகிறோம். சொன்னதற்கு அதிகமாகவே தண்ணீர் வசதி கழிவறை வசதி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மாநாட்டு வேலைகள் முடியவில்லை. விரைவில் முடிந்துவிடும்” எனக் கூறியுள்ளார்.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!