undefined

போரை நிறுத்தும் வரை பிணைக் கைதிகளை விடுவிக்க மாட்டோம்.. ஹமாஸ் திட்டவட்டம்!

 

பாலஸ்தீன காசா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வார் கொன்றது. சில மாதங்களுக்கு முன் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாஹியா சின்வார் கொல்லப்பட்டது ஹமாஸ் அமைப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

யாஹியா சின்வார் மரணத்தை ஹமாஸ் அமைப்பும் உறுதி செய்தது. இதன்பிறகு, இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறும் வரை பணயக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸ் துணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா கூறுகையில், காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.

இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும். சிறையில் உள்ள எங்கள் அமைப்பை விடுவிக்க வேண்டும். காசாவில் எங்கள் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகள் மற்றும் போர் நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகளை விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றார். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!