புத்தகப்பை, கற்களை வீசி சிறுத்தையை காட்டுக்குள் விரட்டியடித்த பள்ளி மாணவன்!
மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது மயங்க் குவாரா, நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென புதரிலிருந்து பாய்ந்த சிறுத்தை தாக்க முயன்றது. சிறுவர்கள் இருவரும் சில நொடிகளில் பதறிப்போன நிலையில், பின்னால் வந்த சிறுத்தை மயங்கின் கையை நகத்தால் கீறி காயப்படுத்தியது.

அந்த நிலையில் தைரியம் இழக்காமல் செயல்பட்ட மயங்க், பாதையில் கிடந்த கற்களை எடுத்துப் சிறுத்தை மீது வீசினார். அவருடன் இருந்த மற்றொரு சிறுவனும் உதவிசெய்து இருவரும் கூச்சலிட்டதால் சுற்றுப்புற மக்கள் அங்கு ஓடிவந்தனர். மனித சத்தத்தால் பயந்த சிறுத்தை உடனே வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. மயங்கின் முதுகில் இருந்த புத்தகப்பை, சிறுத்தையின் முழுத்தாக்குதலில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த இரு சிறுவர்களும் அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். இந்த துணிச்சலான செயலுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்ததுடன், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
