2 மாதங்களில் 8 குழந்தைகள் தற்கொலை ...... 7 ம் வகுப்பு மாணவி பள்ளியில் இருந்து குதித்து பலி..!
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் 13 வயது மாணவி ஒருவரின் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.7-ம் வகுப்பு மாணவியான ஆரோஹி தீபக் பிட்லா, பள்ளி தொடங்கிய சில நிமிடங்களிலேயே மூன்றாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கும் பின்னர் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச்சென்றும் உயிரை காக்க முடியவில்லை.

சிறுமியை தொடர்ந்து கிண்டல் செய்ததாக வகுப்பு சிறுவர்கள் மீது குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். ஆரோஹி இதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தந்தை தீபக் பிட்லா கவலை தெரிவித்தார். கல்வித் திறன் குறைவாக இருப்பது குறித்து ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்ததால் மன அழுத்தமும் அதிகரித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த சந்தேகத்திற்குரிய மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துன்புறுத்தல், கல்வி அழுத்தம் உள்ளிட்ட அனைத்து கோணங்களும் விசாரணையில் கவனிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஜல்னாவில் நடந்த இந்தச் சம்பவம் கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
