கோர விபத்து... லாரி மீது டெம்போ மோதி 7 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலத்தில் லாரி மீது டெம்போ மோதி கோர விபத்து ஏற்பட்டத்தில் பரிதாபமாக 7 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம், பாட்னாவில் லாரி ஒன்றின் மீது நேருக்கு நேராக டெம்போ மோதியதில் 7 பேர் பலியானார்கள். பாட்னாவின் மசெளரி பகுதியில் உள்ள நூரா பாலம் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இரவு 9.30 மணிக்கு நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். பலியானவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
