நடிகர் தர்மேந்திரா காலமானார்... பாலிவுட் திரையுலகில் சோகம்!
பாலிவுட் திரையுலகின் புகழ் மிக்க நட்சத்திரமான தர்மேந்திரா, கடந்த சில வாரங்களாக இதய கோளாறு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சமீபத்தில் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவியபோதும், அவர் நலமாக உள்ளார் என மனைவி ஹேமமாலினி மற்றும் மகள் ஈஷா தியோல் விளக்கம் அளித்திருந்தனர். பின்னர் வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை தொடர்ந்தது.

ஆனால் இன்று அதிகாலை அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்து உயிரிழந்ததாக பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மும்பை காவல்துறையும் தர்மேந்திரா மறைவினை உறுதி செய்ததுடன், இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளது.

தர்மேந்திராவின் மறைவு பாலிவுட் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் வைக்கப்பட்டுள்ள தகன இடத்திற்கு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். 89 வயதிலும் திரைத்துறையைக் கவர்ந்தவர் தர்மேந்திரா பல தலைமுறைகளால் போற்றப்படும் நடிகராக என்றும் நினைவில் நிற்பார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
