பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து கோர விபத்து... குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

 
பஞ்சாப் விபத்து பஞ்சாப் விபத்து

தறிகெட்டு ஓடிய தனியார் சொகுசு பேருந்து, பாலத்தில் இருந்து கவிழ்ந்து கீழே விழுந்ததில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்டத்தில் நேற்று ஃபரித்கோட் - கோட்கபுரா சாலையில் 36 பயணிகளுடன் தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று அமிர்தசரஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ​ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிகெட்டு ஓடிய நிலையில், எதிரே வந்த லாரியில் மோதியது. இதில் பேருந்து 10 அடி உயர பாலத்தில் இருந்து கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகளை முதன்மை சிகிச்சைக்காக ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றினர்.

காயமடைந்தவர்களில் இருவர் அமிர்தசரஸில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் விபத்தில் ஒரு கையை இழந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?