ஜேடிஎஸ் பிரமுகரை கொலை செய்ய முயன்ற வழக்கில் காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது !

 
குற்றவாளி
 

கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் ஜேடிஎஸ் பிரமுகர் அஸ்கருக்கு எதிராக நடந்த கொலை முயற்சி வழக்கில் தினமும் புதிய திருப்பங்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 10ஆம் தேதி பாஷா நகரில் அஸ்கரை கத்திக்குத்தால் தாக்க ஒரு கும்பல் முயன்றதில் அவர் தீவிரமாக காயமடைந்தார். விசாரணையில், முன்விரோதம் காரணமாக இதற்கு காரணமானவர் காங்கிரஸ் பிரமுகர் காலித் பயில்வான் என்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இவரைக் கைது செய்ய வலைவீசப்பட்ட நிலையில், காலித் அடிக்கடி இடம் மாறி பெங்களூரு, கோவா உள்ளிட்ட பகுதிகளில் தப்பிச் சென்றது தெரியவந்தது.

டெல்லி போலீஸ்

ஆனால் இதற்குள் மற்றொரு பரபரப்பு தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. காலித் பயில்வானுக்கு தப்பிக்க உதவி செய்தவர், முன்னாள் ஜேடிஎஸ் பிரமுகரும் தற்போது காங்கிரஸ் பிரமுகருமான சவிதா மல்லேஷ் நாயக் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நடிகை மற்றும் மாடலாகவும் அறியப்படும் சவிதா, மாயகொண்டா தொகுதியில் போட்டியிட இரு கட்சிகளிலும் டிக்கெட் கேட்டிருந்தார். ஜேடிஎஸில் டிக்கெட் கிடைக்காததால் காங்கிரசில் சேர்ந்த அவர், காங்கிரஸ் சார்பாகவும் மீண்டும் டிக்கெட் பெற முயற்சித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ்

சவிதா பெங்களூருவில் பதுங்கியிருந்ததைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும் காலித் பயில்வானை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜேடிஎஸ் பிரமுகரை கொலை செய்ய முயன்ற வழக்கில் காங்கிரஸ் பெண் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!