பகீர்... போலி டாக்டர் அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழப்பு!

 
அறுவை சிகிச்சை
நாடு  முழுவதும் பல மாநிலங்களிலும் போலி மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் வருடக்கணக்கில் கண்டுப்பிடிக்கப்படாமலே வைத்தியம் பார்த்து வரும் சம்பவங்கள் அவ்வப்போது வெளியுலகிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட 7 பேர் உயிரிழந்த நிலையில் போலி டாக்டரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர வைக்கிறது. பல வருடங்களாக இவர் வைத்தியம் பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 

அறுவை சிகிச்சை

மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி டாக்டரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் இருந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web