மணிப்பூரில் கிளர்ச்சியாளர் உட்பட 5 பேர் கைது!

 
மணிப்பூர் கலவரம்

மணிப்பூரில் கிளர்ச்சியாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் பதற்ற நிலை உருவாகியிருக்கிறது.

மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் நேற்று தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர்

மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தின் பிம்பாரோ பகுதியில் தடைசெய்யப்பட்ட குக்கி நேஷனல் பிரண்ட் என்ற அமைப்பின் கீழ் பணியாற்றி வந்த 4 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இதைப் போலவே கம்ஜோங் மாவட்டத்தின் இந்திய - மியான்மர் எல்லையின் அருகிலுள்ள குல்டுஹ் கிராமத்தில் தடைசெய்யப்பட்ட மற்றொரு அமைப்பான பீபள்ஸ் லிபரேஷன் ஆர்மியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று பாதுகாப்புப் படையினரால் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

மணிப்பூர் சிஆர்பிஎஃப் ஜவான்

மேலும் கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, மணிப்பூரின் 5 மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் முன்வந்து தங்களது ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் நேற்று ஒப்படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web