பகீர்... டெல்லி குண்டு வெடிப்பு... பாகிஸ்தானிய செயலி மூலம் இந்தியாவில் தாக்குதல்களுக்கு “தற்கொலைப்படை” உருவாக்க நிதி திரட்டல்...!
செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே 13 பேரை பலிகொண்ட கார் குண்டுவெடிப்பு வழக்கில், இது இந்தியாவை குறிவைத்து திட்டமிட்ட பெரிய அளவிலான பயங்கரவாத சதியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன. எல்லைக்கு அப்பால் இருந்து முன்கூட்டியே ஒழுங்கமைக்கப்பட்ட திட்டம் எனத் தெரிவிக்கும் முக்கிய தடயங்கள் கைவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு, இந்தியாவில் தாக்குதல்களுக்கு “தற்கொலைப்படை” உருவாக்க நிதி திரட்டிவருகிறது என புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிதி, டிஜிட்டல் ஹவாலா நெட்வொர்க்கின் வழியாக பயங்கரவாதிகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், பாகிஸ்தானில் செயல்படும் சடாபே உள்ளிட்ட இ-வாலட் பயன்பாடுகள் மூலம் ரகசியமாக பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, டிஜிட்டல் நிதி பாதைகள் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெட்வொர்க்கை இயக்குபவர்கள், எல்லைத் தாண்டிய பயனாளர்கள், மேலும் பெண்கள் வரை சேர்த்துக் கொண்டுள்ள புதிய சதித்திட்டம் ஆகியவை மீது புலனாய்வாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். நவம்பர் 10-ஆம் தேதி i20 காரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு “பயங்கரவாத சம்பவம்” என மத்திய அரசு அறிவித்துள்ளது. குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு துணைநின்றவர்களை விரைவில் பிடித்து நீதியின் முன் நிறுத்தும் வகையில், விசாரணையை அவசரமாக முன்னெடுக்குமாறு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
