நெஞ்சை உறைய வைக்கும் சோகம்... மருத்துவமனையில் ஐசியூ படுக்கையிலேயே தாலி கட்டிய மணமகன்!

 
கேரளா
 

கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் கொம்முடி பகுதியைச் சேர்ந்த ஆவணி–ஷரோன் ஜோடியின் திருமணம் நவம்பர் 21ம் தேதி ஆலப்புழா சக்தி ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருந்தது. நவம்பர் 20ஆம் தேதி இரவு வரவேற்பு விழாவும் சிறப்பாக முடிந்தது. மறுநாள் காலை திருமண அலங்காரத்திற்காக ஆவணி தனது காரில் உறவினர்களுடன் முன்பதிவு செய்யப்பட்ட நிலையத்துக்கு புறப்பட்டார்.

கேரளா

ஆனால் பாதி வழியில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அருகிலிருந்தோர் உடனே ஆவணி மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். பின்னர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் ஆவணியை கொச்சி லேக்ஷோர் மருத்துவமனைக்கு மாற்றினர். முதுகுத்தண்டு பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த அதிர்ச்சிநிலையிலும், இரண்டு குடும்பங்களும் திருமணத்தை நிறுத்தாமல் மருத்துவமனையிலேயே நடத்த முடிவு செய்தனர். மருத்துவர்களின் அனுமதியுடன், அவசர சிகிச்சை பிரிவில் படுத்திருந்த ஆவணியின் கழுத்தில் மணமகன் ஷரோன் தாலி கட்டிய காட்சி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது. மண்டபத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு திட்டமிட்டபடி விருந்தும் பரிமாறப்பட்டது. ஆவணியுடன் இருந்த மேலும் மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஆவணிக்கு முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!