யூடியூப்பை அதிரவைத்த சாதனை... 5 பில்லியன் பார்வைகளை கடந்து புதிய உச்சம் தொட்ட ஸ்ரீ ஹனுமான் சாலிசா!
14 ஆண்டுகளாக பக்தி மனங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் 'ஸ்ரீ ஹனுமான் சாலிசா', யூடியூப்பில் 5 பில்லியன் பார்வைகளைத் தாண்டிய முதல் இந்திய வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது. 2011 மே 10 அன்று டி-சீரிஸ் வெளியிட்ட இந்த பக்தி காணொளி, மறைந்த குல்ஷன் குமார் தோற்றமளிக்கும் சிறப்பும், ஹரிஹரனின் குரலும், லலித் சென்னின் இசையும் இணைந்து, இந்தியர்களின் ஆன்மீக உணர்வை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. மற்ற இந்திய பாடல்களும், காணொளிகளும் 2 பில்லியனுக்கும் கீழே உள்ள நிலையில், 'ஸ்ரீ ஹனுமான் சாலிசா' தனித்த கட்டத்தில் சாதனை படைத்து நிற்கிறது.
5,006,713,956 பார்வைகளை கடந்த இந்த காணொளி குறித்து டி-சீரிஸ் நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. நிர்வாக இயக்குனர் பூஷன் குமார், “இந்த சாதனை டிஜிட்டல் எண்ணிக்கையை தாண்டி, கோடிக்கணக்கானோர் கொண்டுள்ள மனங்களின் பக்தியை வெளிப்படுத்துகிறது. என் தந்தை குல்ஷன் குமார் ஆன்மீக இசையை வீடுதோறும் கொண்டு செல்ல விரும்பினார், இந்த சாதனை அவரது கனவின் தொடர்ச்சி,” என தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட ஒரே வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ள இது, யூடியூப்பின் சர்வகால அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 வீடியோக்களில் ஒன்றாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையை எட்டிய இந்திய பதிவேற்றம் எதுவும் அருகில் கூட செல்லாத சூழலில், அடுத்த இடங்களில் உள்ள 'லெஹங்கா' (1.8 பில்லியன்), '52 கஜ் கா தமன்', 'ரௌடி பேபி' (தலா 1.7 பில்லியன்) போன்றவை மிகத் தூரத்தில் உள்ளன. உலக அளவிலும் முன்னணி பட்டியலில் 'பேபி ஷார்க் டான்ஸ்', 'டெஸ்பாசிட்டோ', 'வீல்ஸ் ஆன் தி பஸ்', 'ஜானி ஜானி யெஸ் பாப்பா' போன்றவை காணப்படும் நிலையில், இந்தியாவின் 'ஸ்ரீ ஹனுமான் சாலிசா'வுக்கும் உலக வரைபடத்தில் ஒரு தனி இடம் உருவாகியிருக்கிறது. பக்தியும் சாதனையும் சேர்ந்து உருவாக்கிய அரிய மைல்கல் இது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
