பாகிஸ்தான் ஏவுகணைகள் எஸ் 400 மூலம் அசால்டாக வீழ்த்திய இந்தியா!

 
சிந்தூர் இந்திய இந்தியா ஏவுகணை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தான் மாநிலத்தில்  9 இடங்களில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் நள்ளிரவு ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் இந்தியா உறுதிப்படுத்தியிருந்தது.  ஜம்மு-காஷ்மீா் எல்லையில் மோதலைத் தீவிரப்படுத்தி, மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர்

இதன் தொடா்ச்சியாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர மாநிலங்களை வான்வழியாகத் தாக்கும் பாகிஸ்தான் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள ராணுவ நிலையங்களைத் தாக்க பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்தியா  ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் முறியடித்தது.

அதனைத் தொடர்ந்து காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லையோரங்களில் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை, இந்தியாவால் 'சுதா்சன சக்ரா' என பெயர் சூட்டியது.  ரஷிய தயாரிப்பான 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு அசால்டாக இந்தியா முறியடித்தது.

400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கி, வீழ்த்தும் திறன் கொண்ட 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், சியால்கோட் பகுதிகளில் இந்திய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட 'ஹாா்பி' ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.  

ஆபரேஷன் சிந்தூர்

மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் ஷெபாஷ் ஷரிப் வீடு அருகே குண்டு மழை பொழிந்ததால் அந்தபகுதியில் பயங்கர சப்தம் கேட்டதை அடுத்து அசாதாரண சூழல் நிலவியது. மிகப்பெரிய கட்டமைப்பான 'எஸ்-400' வான் பாதுகாப்பு அமைப்பின் ஒவ்வொரு ஆயுதமும் பல கிலோமீட்டர் கண்காணிக்கும் திறன் பெற்றது. இது ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகள், பஞ்சாப் பதான்கோட் எல்லைப் பகுதி, ராஜஸ்தான், குஜராத் எல்லைப் பகுதிகள் என 3 'எஸ்-400' நிலைநிறுத்தப்பட்டு தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web