கல்லூரி மாணவி கழுத்தை நெரித்துக் கொலை... நிர்வாண நிலையில் வகுப்புத் தோழன் வீட்டில் சடலம் மீட்பு!
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் 24 வயது எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி மர்மமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை தனது வகுப்பு தோழரான பியூஷ் தனோட்டியாவுடன் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதாக கூறி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அதே நாளில் அவரது செல்போனில் இருந்து கல்லூரி வாட்ஸ்அப் குழுவிற்கு ஆபாச வீடியோ பகிரப்பட்டதும் சந்தேகத்தை அதிகரித்தது.

வீடியோவில் மாணவியின் முகம் தெளிவாக தெரிந்த நிலையில், அருகில் இருந்த நபரின் முகம் மறைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தகவல் அளித்ததைத் தொடர்ந்து மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்தார். ஆரம்பத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பியூஷின் வீடு பூட்டப்பட்டிருந்தது.

பின்னர் பியூஷ் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், மாணவி நிர்வாண நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழுத்தில் கயிறு தழும்பு இருந்ததால் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள பியூஷை தேடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
