அதிகாலையில் அலறிய மக்கள்... லடாக்கில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
லடாக்கில் இன்று அதிகாலை 4.32 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீநகர், லடாக்கில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
EQ of M: 3.6, On: 24/03/2025 04:32:58 IST, Lat: 34.35 N, Long: 78.06 E, Depth: 10 Km, Location: Leh Ladakh, Ladakh.
— National Center for Seismology (@NCS_Earthquake) March 23, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/XX8eaTC0bN
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 78.06 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று காலை டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
