சாதனை... வரலாற்றில் உச்சம்.. முதன்முறையாக ஜூன் மாத ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.61 லட்சம் கோடி!

 
ஜிஎஸ்டி

நம்நாட்டில் 2023 ஜூன் மாதத்தில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 497 கோடி ரூபாய் ஜி.எ.ஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 12 சதவிகிதம் அதிகமாகும்.

2023 ஜூன் மாதத்தில், மத்திய ஜி.எஸ்.டியாக ரூபாய் 31 ஆயிரத்து 13 கோடி, மாநில ஜிஎஸ்டியாக ரூபாய் 38 ஆயிரத்து 292 கோடி. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டியாக ரூபாய் 80 ஆயிரத்து 292 கோடி, கூடுதல் வரியாக ரூபாய் 11 ஆயிரத்து 900 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிக ஜிஎஸ்டி வசூல் செய்த மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், தமிழகம், உத்தரப் பிரதேசம் இடம் பெறுகின்றன.

நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி

தொடர்ந்து 16 மாதங்களாக ரூபாய் 1.40 லட்சம் கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூபாய் 1.50 லட்சம் கோடியையும், ரூபாய் 1.60 லட்சம் கோடியை 4 முறையும் மாத வசூலில்  ஜிஎஸ்டி தாண்டியுள்ளது. அதி கபட்சமாக, 2023 ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி

வசூலிக்கப்படும் வரியான முறையாக மாநில வாரிய மத்திய அரசு பிரித்து வழங்குகிறது இதன் மூலம் மாநிலங்கள் பயனடைவதோடு ஒற்றை முறை நடைமுறையை எளிதாக்குவதாக வரிக்கட்டுவோர் சிலாகிக்கிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web