பகீர் வீடியோ... நிர்வாணமாக்கி கட்டி வைத்து கம்பியால் தாக்கிய காதலி வீட்டார்!

 
 வைரல் வீடியோ... நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டி கம்பிகளால் அடிச்சி துன்புறுத்திய காதலி... காதலன் பகீர் வாக்குமூலம்!    வைரல் வீடியோ... நிர்வாணமாக்கி கயிற்றில் கட்டி கம்பிகளால் அடிச்சி துன்புறுத்திய காதலி... காதலன் பகீர் வாக்குமூலம்!  

காதலனை நிர்வாணமாக்கி, கயிற்றால் கட்டி வைத்து, கம்பியால் காதலி தாக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயி மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சிதாபூரில் வசித்து வரும் அதுல் காஷ்யப் என்பவர், கடந்த 5 மாதங்களாக லோனார் காவல் நிலைய எல்லையில் உள்ள இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.


இதனையடுத்து கடந்த மே 21 ம் தேதி அந்தப் பெண் தனது குடும்பத்தினரிடம் அதுல் காஷ்யப்பை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி அதுலை அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கிராமத்திற்கு சென்றதும் அதுல் பயங்கரமாக சிக்கிக் கொண்டார்.  

அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அதுலை நிர்வாணமாக்கி கயிறால் கட்டி வைத்து, கம்பிகளாலும் குச்சிகளாலும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். அதன் பின்னர் வெந்நீரை, அதுலின் உடலில் ஊற்றி கொடுமை செய்துள்ளனர். அதுலின் பிறப்புறுப்பில் ஹாமரால் அடித்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச போலீஸ்
இது குறித்து தகவலின் பேரில் போலீசார் அதுலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் உடலெங்கும் அடிக்கப்பட்ட அடையாளங்கள் தெரிகிறது. தற்போது அதுல் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது.  

இது குறித்து தகவல் வந்தவுடன் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு புகாரும் பெறப்படவில்லை. புகார் வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என காவல்துறையினர்  கூறியுள்ளனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, மக்களின் ஆவேசத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?