துப்பாக்கி சூட்டில் 3 பெண் நக்சல்கள் சுட்டுக் கொலை!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பெண் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் நக்சல் தடுப்புப் படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் நேற்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுடன் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சுப்கர் வனப்பகுதியில் உள்ள ரோண்டா வன முகாம் அருகே பெண் நக்சல்கள் 3 பேர் நக்சல் தடுப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நக்சல்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ரைஃபிள்கள் உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நக்சல்கள் சிலர் தப்பித்துச் சென்றதாகவும் அவர்களைப் பிடிக்க 12 காவல்துறை குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
