ரூ.202க்கு 13 ஓடிடி தளங்கள்... அசத்தலான ப்ரீபெய்டு திட்டம் அறிமுகம்!

 
வோடோபோன்

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு சவால் விடும் பல்வேறு புதிய ரீசார்ஜ் பிளான்களுடன் வோடாஃபோன் நிறுவனம் களமிறங்கியுள்ளது.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தவிர்த்து ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஆகிய 3 மொபைல் சேவை நிறுவனங்கள் மட்டுமே தற்போது உள்ளன. இதில் 44 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ முன்னணியில் உள்ளது. 37 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல்லும், 23.44 கோடி வாடிக்கையாளர்களுடன் வோடாஃபோனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஓடிடி தளங்கள்

இந்நிலையில், தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் வோடாஃபோன் நிறுவனம் முயன்று வருகிறது. மேலும், போட்டி நிறுவனங்களுடன் போட்டியிடவும் அந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, மிகக் குறைந்த செலவில், பல்வேறு ஓடிடி சேவைகளை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது வோடாஃபோன்.

அதாவது, 202 ரூபாய்க்கு பொழுதுபோக்கு ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த ரீசார்ஜ் மூலம் 1 மாதத்திற்கான விஐ மூவீஸ் மற்றும் டிவி ப்ரோ சந்தா பெற முடியும். இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 13-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களின் சந்தாவை முற்றிலும் இலவசமாக பெறலாம். இதில் பிரபலமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சன்நெக்ஸ்ட், சோனி லிவ் உள்ளிட்டவையும் அடங்கும். ஆனால், இந்த ரீசார்ஜில் கால் மற்றும் டேட்டா உள்ளிட்ட பிற சேவைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போன் சேவை

அதேபோல், குறைந்த செலவில் கால் மற்றும் டேட்டா உள்ளிட்ட சேவைகள் பெற விரும்பும் வோடாஃபோன் வாடிக்கையாளர்களுக்காக ஸ்பெஷலாக கொண்டு வரப்பட்டுள்ளது ரூ.219 திட்டம். இதன் மூலம், 21 நாள் வேலிடிட்டி, அன்லிமிடெட் கால், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்றாடம் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியை பெற முடியும்.

வோடாஃபோன் அறிமுகம் செய்யும் இந்த புதிய பிளான்கள் மூலம் மாதம் 421 ரூபாய் செலவில் ஒட்டுமொத்தமாக பல்வேறு சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது வோடாஃபோன் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web