ஊழியர்களுக்கு 70 கோடி போனஸ் பணம்! அள்ளி கொடுத்த சீன நிறுவனம்!

 
சீன நிறுவனம் போனஸ்

கொரோனா காலத்துக்கு பிறகான வாழ்க்கை பலருக்கும் வாழ்க்கையாகவே இல்லை. வாழைத் தோட்டத்துக்குள் சூறாவளி காற்று சுழன்றடித்து சென்றது போல சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. பலருக்கு வேலை இல்லை. அப்படியே வேலை நீடித்திருந்தாலும் பழைய சம்பளமில்லை. அட.. இவ்வளவு ஏனுங்க.. பலருக்கு உயிரே இல்லை. அக்கம்பக்கத்து வீடுகளில் பார்த்து பழகிய மனிதர்கள் திடீரென கொரோனாவுக்கு உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சீனாவில் தான் பயங்கர அடி. அப்படி இருந்தும், அதிக லாபம் கிடைத்திருப்பதாக கூறி, தனது ஊழியர்களுக்கு ரூபாய் 70 கோடிகளை போனஸ் பணமாக அறிவித்திருக்கிறது சீன நிறுவனம் ஒன்று.

இத்தனைப் பணம் போனஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், பலருக்கும் முப்பது சதவிகிதம் வரை ஊதிய உயர்வும் கூட.  இந்த போனஸ் பணம் ச்சும்மா ஆயிரம், லட்சங்களில் எல்லாம் இல்லை.. கோடிகளை கொட்டி கொடுத்து ஊழியர்களை திகைக்க வைத்திருக்கிறது.

China

மொத்த பணத்தையும் கண்காட்சி போல வைத்து, அனைவரையும் அழைத்து பிரித்து கொடுத்திருக்கிறார் நிறுவன முதலாளி. நிஜமாகவே அவர் முதலாளி தான். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஹெனன் மைன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கிரேன் போன்ற கனரக வானங்கள் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் இந்த நிறுவனம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் சுமார் 5,100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருவாய் மட்டும் 9.16 பில்லியன் யுவான் (1.1 பில்லியன் டாலர்) ஆக உள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் சீனாவின் பொருளாதாரம் சற்று ஆட்டம் கண்ட போதிலும் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்ததால் ஹெனன் மைன் நிறுவனம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

இதனால், ஊழியர்களை நன்கு கவனிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த நிறுவனம் ஊழியர்களை பணத்தை வாரி இறைத்துள்ளது. இதற்காக நிறுவன வளாகத்தில் கடந்த 17-ம் தேதிக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹெனன் மைன் நிறுவனம் நிகழ்ச்சி மேடையிலேயே பணத்தை மலை போல குவித்து வைத்தது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு பணக்கட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தை பார்த்த ஊழியர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்துள்ளனர்.

China

சிறப்பாக பணியாற்றிய மூன்று சேல்ஸ் மேனஜர்களுக்கு மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக கொடுத்துள்ளது. நிறுவனத்தின் சிறந்த ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்ட சுமார் 40 பேருக்கு ஒரு மில்லியன் யுவானிற்கு மேலாக போனசாக கொடுத்துள்ளது. அதுபோக பணத்தை எண்ணும் போட்டியையும் ஊழியர்களுக்கு வைத்து இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அதிக தாள்களை எண்ணியவர்களுக்கு தனியாக ஒரு பரிசும் கொடுத்துள்ளது.

இதற்காக மட்டும் 12 மில்லியன் யுவான் தொகையை ஒதுக்கி வைத்துள்ளது. இந்த போனஸ் தொகை போக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 30 சதவீத சம்பள உயர்வையும் அளித்து பணமழையில் குளிக்க வைத்து இருக்கிறது. நிறுவனத்தின் நடைபெற்ற இந்த விழாவில் திரும்பிய பக்கம் எல்லாம் பணம் தான் உள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஊழியர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் வெளியாகியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web